பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சத்யன் தகுதி + "||" + Satyan qualifies for the World Table Tennis Tournament

உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சத்யன் தகுதி

உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சத்யன் தகுதி
உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சத்யன் தகுதிபெற்றார்.
யோகோஹமா,

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் ஆசிய கோப்பை போட்டி ஜப்பானில் நடந்தது. இதில் நேற்று நடந்த 5, 6-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் 4-11, 8-11, 8-11, 12-14 என்ற நேர் செட் கணக்கில் லின் யுன் ஜூவிடம் (சீனதைபே) தோல்வியை தழுவினார். இருப்பினும் சத்யன் 6-வது இடத்தை பிடித்ததன் மூலம் சீனாவில் அக்டோபர் மாதம் நடக்கும் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.