மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சீன வீரர் லின் டான் ‘சாம்பியன்’


மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சீன வீரர் லின் டான் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 7 April 2019 11:13 PM GMT (Updated: 7 April 2019 11:13 PM GMT)

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், சீன வீரர் லின் டான் சாம்பியன் பட்டம் வென்றார்.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான சீன வீரர் லின் டான், சக நாட்டவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான சென் லாங்கை சந்தித்தார். 1 மணி 18 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் லின் டான் 9-21, 21-17, 21-11 என்ற செட் கணக்கில் லாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 35 வயதான லின் டான் கடந்த 2 ஆண்டுகளில் வென்ற மிகப்பெரிய பட்டம் இது தான்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான தாய் ஜூ யிங் (சீனதைபே) 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார்.

Next Story