பிற விளையாட்டு

புரோ கபடி வீரர்கள் இன்று ஏலம் + "||" + Pro kabaddi players today Auctions

புரோ கபடி வீரர்கள் இன்று ஏலம்

புரோ கபடி வீரர்கள் இன்று ஏலம்
புரோ கபடி வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
மும்பை,

7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி மொத்தம் 29 வீரர்கள் அணியால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர். அஜய் தாகூர், தமிழ் தலைவாஸ் அணியில் தொடருகிறார். 7-வது கபடி போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 441 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வீரர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏல நிகழ்ச்சியை மாலை 4.30 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.