பிற விளையாட்டு

அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட பொழுதுபோக்கு மல்யுத்த போட்டி ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர் + "||" + Held in the United States Great entertainment Wrestling competition

அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட பொழுதுபோக்கு மல்யுத்த போட்டி ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்

அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட பொழுதுபோக்கு மல்யுத்த போட்டி ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்
அமெரிக்காவில் நடந்த பிரமாண்டமான பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
நியூஜெர்சி,

பொழுதுபோக்கு மல்யுத்த போட்டி (டபிள்யூ.டபிள்யூ.இ.), ‘மல்யுத்த மானியா35’ என்ற பெயரில் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் நடத்தப்பட்டது. அங்குள்ள மெட்லைப் அரங்கில் நடந்த மிகப்பெரிய மல்யுத்த நிகழ்வான இதை 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.


இதில் பெண்களுக்கு என்று முதல்முறையாக நடத்தப்பட்ட போட்டியில் பெக்கி லின்ச் (அயர்லாந்து) அபாரமாக செயல்பட்டு ரோன்டா ரவுசி, சார்லெட் பிளேரை தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிப்பறித்தார். யுனிவர்செல் சாம்பியன்ஷிப் போட்டியில் சேத் ரோலின்ஸ் (அமெரிக்கா) சக நாட்டவரான பிராக் லெஸ்னரை சாய்த்து வாகை சூடினார். இன்னொரு பிரிவில் கோபி கிங்ஸ்டனும் பட்டத்தை வசப்படுத்தினார்.

ஜாம்பவான்கள் டிரிபிள் எச், பாடிஸ்டா இன்னொரு போட்டியில் சந்தித்தனர். இதில் தோற்றால் ஓய்வு பெற வேண்டிய நிலையில் டிரிபிள் எச். மல்லுகட்டினார். இருப்பினும் தனது நண்பர் ரிக் பிளேரின் உதவியோடு இந்த கடுமையான, துடிப்பு மிக்க மோதலில் டிரிபிள் எச் வெற்றி பெற்றார்.

இரண்டாவது முறையாக புற்றுநோய் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து கோதாவில் குதித்த 33 வயதான ரோமன் ரைன்ஸ் (அமெரிக்கா) முழு உத்வேகத்துடன் சண்டையிட்டு டிரிவ் மெக்லின்டையை வீழ்த்தினார். அனைத்து டபிள்யூ.டபிள்யூ.இ. சூப்பர் ஸ்டார்களும் இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க சாகசங்களை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இந்தியாவிலும் இந்த போட்டியை ரசிகர்கள் டி.வி. மூலம் குதூகலமாக கண்டுகளித்தனர். சோனி டென்1, சோனி டென்3, சோனி சிக்ஸ் ஆகிய சேனல்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...