பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து + "||" + Singapore Open Badminton Quarter final Saina, Sindhu

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் போர்ன்பவீ சோச்சுவாங்கை (தாய்லாந்து) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் கடந்த வாரம் மலேசிய ஓபனில் முதல் சுற்றில் சோச்சுவாங்கிடம் அடைந்த தோல்விக்கும் சாய்னா பழிதீர்த்துக் கொண்டார். சாய்னா அடுத்து முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவுடன் (ஜப்பான்) மோத உள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து தன்னை எதிர்த்த மியா பிளிச்பெல்ட்டை (டென்மார்க்) 21-13, 21-19 என்ற நேர் செட்டில் 39 நிமிடங்களில் விரட்டியடித்து கால்இறுதியை உறுதி செய்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவாலின் கணவரும், காமன்வெல்த் விளையாட்டு முன்னாள் சாம்பியனுமான காஷ்யப் 9-21, 21-15, 16-21 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கிடம் (சீனா) போராடி வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய் 11-21, 11-21 என்ற நேர் செட்டில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) பணிந்தார். அதே சமயம் ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-12, 23-21 என்ற செட் கணக்கில் ஹான்ஸ் கிறிஸ்டியனையும் (டென்மார்க்), சமீர் வர்மா (இந்தியா) 21-15, 21-18 என்ற செட்டில் குவாங்ஜூவையும் (சீனா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறை; 15 பிரம்படி
சிங்கப்பூரில், தமிழக வாலிபருக்கு 3½ ஆண்டு சிறையும், 15 பிரம்படியும் கொடுக்கப்பட்டது.
2. சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி, இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3. சிங்கப்பூரில் நிரவ் மோடி குடும்பத்தினர் வங்கி கணக்கு முடக்கம்
சிங்கப்பூரில் நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
4. தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: 162 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பு
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மாற்று விமானத்தில் 162 பயணிகள் 9 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
5. சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்
சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.