பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம் சாய்னா, ஸ்ரீகாந்த் வெளியேற்றம் + "||" + Singapore Open Badminton Sindhu progress to the semi-final Saina, Srikanth exit

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம் சாய்னா, ஸ்ரீகாந்த் வெளியேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம் சாய்னா, ஸ்ரீகாந்த் வெளியேற்றம்
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கா யான்யனை (சீனா) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 59 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) எதிர்கொள்கிறார். மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 8-21, 13-21 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் நஜோமி ஒகுஹராவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 21-18, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். மோமோட்டாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 10-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான ஷோ டைன் சென்னிடம் (சீன தைபே) வீழ்ந்தார். இந்ததொடரில் சிந்துவை தவிர மற்ற இந்தியர்கள் அனைவரும் தோல்வி கண்டு வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.