பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசராகவும் உள்ளார்.

*உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

*பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களது வருகையால் தனக்கு பிரச்சினை இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் அவர்களை பற்றி நன்கு தெரியும் என்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.

* ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ‌ஷகிப் அல்–ஹசனை உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி முகாமுக்கு வரும்படிஅந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. வருகிற 22 அல்லது 23–ந்தேதி அவர் தாயகம் திரும்புவார் என்று தெரிகிறது.

*பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசராகவும் உள்ளார். ஆதாயம் பெறும் வகையில் ஒரே நேரத்தில் இரட்டை பொறுப்பில் இருப்பதால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்து விட்ட கங்குலியை வருகிற 20–ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடைத்த அதிகாரி டி.கே.ஜெயின் ‘சம்மன்’ அனுப்பியுள்ளார்.

*13 வயதுக்குட்பட்டோருக்கான சப்–ஜூனியர் சென்னை மண்டல கால்பந்து போட்டியில் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னையின் எப்.சி. அணி 8–0 என்ற கோல் கணக்கில் ராமன்விஜயன் கால்பந்து பள்ளி அணியை தோற்கடித்தது. முகமது இர்பான், ஸ்ரீனித், கண்ணன் ஆகியோர் தலா 2 கோலும், அஜய்குமார், ரிஷிபரத் தலா ஒரு கோலும் அடித்தனர். சென்னையின் எப்.சி.அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 21–ந்தேதி எப்.சி.மெட்ராஸ் அணியை சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கான் டி லாங்.
2. துளிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி.வி. சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
3. துளிகள்
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா, மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி ஜெயின் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
4. துளிகள்
* ஒலிம்பிக் கால்பந்து தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டின் ஒரு ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, இந்தோனேஷியாவை நேற்று எதிர்கொண்டது. மியான்மரில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் வெற்றி பெற்றது. 2 கோல்களையும் இந்திய வீராங்கனை டாங்மி கிரேஸ் அடித்தார்.
5. துளிகள்
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் ஆட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.