பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கான் டி லாங்.

*சென்னையில் நடந்து வரும் ஜூனியர் லீக் சென்னை மண்டல கால்பந்து போட்டியில் (15 வயதுக்குட்பட்டோர்) நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 4–1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி எப்.சி. அணியை தோற்கடித்தது. சென்னையின் எப்.சி. அணியில் சூர்யா 2 கோலும், யுகன், சிவமணி தலா ஒரு கோலும் அடித்தனர். 4–வது ஆட்டத்தில் ஆடிய சென்னையின் எப்.சி. அணிக்கு இது 2–வது வெற்றியாகும்.

*ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனத்தைபேயில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் கஜகஸ்தானிடம் தோல்வி கண்ட சென்னை ஸ்பார்டன்ஸ் (இந்தியா) அணி நேற்று தாய்லாந்து கிளப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 25–22, 23–25, 25–21, 23–21, 15–9 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

*ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கான் டி லாங். மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 38. ஸ்காட்லாந்து அணிக்காக 13 ஒரு நாள் போட்டிகளும், எட்டு 20 ஓவர் போட்டிகளும் ஆடியிருக்கிறார். 2017–ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதுடன், முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி முதல் வெற்றி பெறவும் காரணமாக இருந்தார்.

*ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இனி ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதிப்போட்டி போல் பாவித்து விளையாட வேண்டும்’ என்றார்.