பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சென்னை மண்டல கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

தென் மண்டல ஆக்கி: எஸ்.டி.ஏ.டி. அணி வெற்றி

ஒய்.எம்.சி.ஏ. சென்னை அமைப்பு சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. (கோவில்பட்டி) அணி 7-1 என்ற கோல் கணக்கில் செயின்ட் பால்ஸ் கிளப் (சென்னை) அணியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி-சென்னை ஆக்கி சங்கம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் லயோலா-புதுச்சேரி கிளப் (மாலை 3 மணி), ஜி.எஸ்.டி.-எஸ்.டி.ஏ.டி. (கோவில்பட்டி) அணிகள் மோதுகின்றன.


சென்னையின் எப்.சி. அணி வெற்றி

15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சென்னை மண்டல கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னையின் எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் கிரேட் கோல்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னையின் எப்.சி. அணி தரப்பில் யுகன், தபிக் அகமது, மாற்று ஆட்டக்காரர் ஆலென் ராஜ்குமார் தலா ஒரு கோல் அடித்தனர்.

சென்னையில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம்

நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான 37-வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (24-ந் தேதி) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கால்இறுதிக்கு தகுதி

ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை ஸ்பார்டன்ஸ் (இந்தியா) அணி 25-15, 25-19, 25-18 என்ற நேர்செட்டில் குயின்ஸ்லாந்து பைரட்ஸ் (ஆஸ்திரேலியா) அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது. நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, வியட்நாம் கிளப் அணியை சந்திக்கிறது.