பிற விளையாட்டு

தங்க பதக்கம் வென்ற கோமதியின் வெற்றியை காண தந்தை இல்லை; தாயார் உருக்கம் + "||" + The father did not see the success of the gold winning of his daughter; Mother

தங்க பதக்கம் வென்ற கோமதியின் வெற்றியை காண தந்தை இல்லை; தாயார் உருக்கம்

தங்க பதக்கம் வென்ற கோமதியின் வெற்றியை காண தந்தை இல்லை; தாயார் உருக்கம்
தங்க பதக்கம் வென்ற கோமதியின் வெற்றியை காண அவரது தந்தை இல்லை என கோமதியின் தாயார் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
தோகா,

கத்தார் நாட்டின் தோகாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 2வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 

இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார்.  இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.  அவரது தந்தை புற்றுநோயால் உயிர் இழக்க, பயிற்சியாளரும் காலமானார். உடல் ரீதியால் பாதிக்கப்பட்ட கோமதி, தனது 30 வது வயதில் பல சவால்களை சந்தித்து சாதனை படைத்துள்ளார். 

இந்த வெற்றி பற்றி கோமதியின் தாயார் ராசாத்தி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.  கஷ்டப்பட்ட குடும்பத்தில் வளர்ந்த பெண்.  தனது தந்தையிடம் சண்டை போட்டு கல்லூரி வரை படித்துள்ளார்.  ஓட்ட பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் அதிகம்.  பல தடைகளை கடந்து பதக்கம் வென்றுள்ளார்.  ஆனால், கோமதியின் வெற்றியை காண அவரது தந்தை இல்லை என உருக்கமுடன் கூறியுள்ளார்.