பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது.

* உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 14-12, 11-5, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரியா டோரோவிச்சை (செர்பியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 502-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுதித்ரா முகர்ஜி 8-11, 17-15, 11-9, 5-11, 6-11, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் 58-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் சபின் வின்டருக்கு அதிர்ச்சி அளித்தார். அதேசமயம் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சச்சின்-சரத் கமல் ஜோடி, ஈரானின் நிமா-நோஷன் இணையிடம் தோற்று வெளியேறியது.


* லோதா கமிட்டி சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் கோர்ட்டுக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ள வக்கீல் நரசிம்மா டெல்லியில் இன்று மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். கிரிக்கெட் போட்டிகளை நடத்துதல் உள்ளிட்ட நிர்வாக செலவினங்களுக்கான மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு போதிய நிதியை, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. தோல்வி எதிரொலியாக, ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவை நீக்கம் செய்தது போல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை நீக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் காலிஸ்சிடம் கேட்ட போது, ‘கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக்கை நீக்குவது குறித்து நாங்கள் எதுவும் ஆலோசிக்கவில்லை. இந்த விஷயம் விவாதத்துக்கும் எடுத்து கொள்ளப்படவில்லை’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: வாலிபர் கைது; ரூ.70.33 லட்சம் பணம் பறிமுதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆன்லைன் வழியே சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி “சாம்பியன்”
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. #MIvsCSK
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #DCvsCSK
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. #MIvKKR
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறியது பஞ்சாப் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஆறுதல் வெற்றியோடு போட்டியை விட்டு வெளியேறியது. #KXIPvCSK