பிற விளையாட்டு

ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார் + "||" + Asian Athletics Competition

ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்

ஆசிய தடகள போட்டி: கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்
ஆசிய தடகள போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார்.
தோகா, 

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.

கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

ஆரோக்யராஜீவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.
2. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.15 லட்சம் ஊக்க தொகை வழங்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று ரூ.15 லட்சம் ஊக்க தொகையை வழங்கினார்.
3. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை: அதிமுக அறிவிப்பு
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது. #AIADMK
4. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல் அமைச்சர் வாழ்த்து
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
ஆசிய தடகள போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.