பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து + "||" + Asian badminton Quarter final Saina, Sindhu

ஆசிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து

ஆசிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து
39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
யுஹான்,

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-13, 21-13 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் கிம் கா இன்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் சாய்னா, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் சோய்ருன்னிசாவை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சிந்து அடுத்து சீனாவின் காய் யான் யானுடன் மோதுகிறார்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-19 என்ற நேர்செட்டில் கா லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
2. ஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா?
ஆசிய பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனைகளான சாய்னா, சிந்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
3. சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து களம் இறங்குகிறார்கள்
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.