பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஸ்பெயின் கால்பந்து அணியின் கோல் கீப்பர் இகேர் கேசில்லாசுக்கு நேற்று பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

* ஸ்பெயின் கால்பந்து அணியின் கோல் கீப்பர் இகேர் கேசில்லாசுக்கு நேற்று பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 வயதான இகேர் கேசில்லாஸ் ஸ்பெயின் அணிக்காக 167 ஆட்டங்களும், ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக 500-க்கும் மேற்பட்ட ஆட்டங்களிலும் விளையாடி இருக்கிறார்.


* உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூலை 14-ந்தேதி முடிந்ததும் உடனடியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தொடரை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை வெஸ்ட் இண்டீஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணம் ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆட உள்ளது.

* சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார். 1926 புள்ளிகளுடன் தனது துப்பாக்கி சுடுதல் வாழ்க்கையில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக சண்டிலா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

* ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டியில் அஜாக்ஸ் (நெதர்லாந்து)- டோட்டனம் ஹாட்ஸ்புர் (இங்கிலாந்து) ஆகிய அணிகளுக்கு இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் அஜாக்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டோனி வான் டி பீக் 15-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

* மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டங்களில் எம்.என்.பி.சி. அணி 79-56 என்ற புள்ளி கணக்கில் கங்கை அணியையும், அர்பன் அணி 41-10 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ ராகவேந்திரா அணியையும் வீழ்த்தியது.