பிற விளையாட்டு

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி + "||" + New Zealand Open Badminton: Saina shock defeat

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆக்லாந்து,

நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 212-ம் நிலை வீராங்கனையான வாங் ஸியியை (சீனா) நேற்று சந்தித்தார். அனுபவம் வாய்ந்த சாய்னா 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் 19 வயதான வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரனீத் 21-17, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் சுபாங்கர் தேவை தோற்கடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 268 ரன்கள் இலக்கு: வெற்றியை நோக்கி இலங்கை அணி
காலே டெஸ்டில் நியூசிலாந்து நிர்ணயித்த 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 267 ரன்னில் ‘ஆல்-அவுட்’
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 267 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
4. நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
5. நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.