பிற விளையாட்டு

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய் + "||" + New Zealand Open Badminton At the end of the quarter Piranay

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய்
நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது.
ஆக்லாந்து,

நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 12-21 என்ற நேர் செட்டில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லின் டானிடம் வீழ்ந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21-14, 21-12 என்ற நேர் செட்டில் டாமி சுஜியர்டோவை (இந்தோனேஷியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் களத்தில் நீடிக்கும் ஒரே இந்தியரான பிரனாய் அடுத்து ஜப்பானின் கன்டா சுனியாமாவை சந்திக்கிறார்.