பிற விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, கோஷல் ‘சாம்பியன்’ + "||" + Asian Squash Competition: Josna, Goshal 'Champion'

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, கோஷல் ‘சாம்பியன்’

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, கோஷல் ‘சாம்பியன்’
ஆசிய ஸ்குவாஷ் போட்டியில், ஜோஸ்னா, கோஷல் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கோலாலம்பூர்,

ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 11-5, 8-11, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் அன்னி ஆவுக்கு (ஹாங்காங்) அதிர்ச்சி அளித்து சாம்பியன் கோப்பையை மீண்டும் வசப்படுத்தினார். இதன் மூலம் கடந்த மாதம் மக்காவ் ஓபனில் அன்னி ஆவிடம் அடைந்த தோல்விக்கும் ஜோஸ்னா பழிதீர்த்துக் கொண்டார். இதன் ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-9, 11-2, 11-8 என்ற நேர் செட்டில் லியோ ஆவ் சுன் மிங்கை (ஹாங்காங்) வீழ்த்தி, இந்த கோப்பையை முதல்முறையாக கைப்பற்றினார். ஆசிய போட்டியில் ஒரே நேரத்தில் இரு இந்தியர்கள் மகுடம் சூடுவது இதுவே முதல்முறையாகும்.