பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் போட்டிகள் முடிவில் மாநில அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான இந்த கூட்டம் மும்பையில் வருகிற 17–ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்க முதல்முறையாக மாநில பெண்கள் அணியின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெண்கள் அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கேதர் ஜாதவ், ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். மொகாலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் கேதர் ஜாதவ் இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் அவர் உலக கோப்பை அணியில் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கேதர் ஜாதவின் காயம் லேசானது தான் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தொடருவார் என்று தேர்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* 8 அணிகள் இடையிலான 20 ஓவர் மும்பை லீக் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வருகிற 14–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வடக்கு மும்பை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த 19 வயது இளம் வீரரான பிரித்வி ஷா இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
* இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் பெடரேஷன், எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.
2. துளிகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
3. துளிகள்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், பிரான்சை சேர்ந்த பாரிஸ் சைன்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
4. துளிகள்
ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பில் இருந்து ஆஸ்கர் ஆப்கன் நீக்கப்பட்டு குல்பதின் நைப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
5. துளிகள்
ஒரு நாள் போட்டி அந்தஸ்து பெற்ற இந்த போட்டியில் நமிபியா 145 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பணியாற்றிய இரண்டு நடுவர்களில் ஒருவர், கிளாரி போலோசக் என்ற பெண். 31 வயதான கிளாரி போலோசக் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.