துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 17 May 2019 10:17 PM GMT (Updated: 17 May 2019 10:17 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.


* இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் எனக்கான இடத்தை தேர்வாளர்கள் அளித்து விட்டனர். அணி நிர்வாகம் என்னை எந்த வரிசையில் களம் இறக்கினாலும் எனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். கடந்த சில மாதங்களாக பேட்டிங்கில் நான் நன்றாக செயல்பட்டு வருகிறேன். எனவே நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனது ஆட்ட நுணுக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

* இந்திய சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி நல்ல பார்மில் இருக்கிறார். எனவே அவரை உலக கோப்பை போட்டியில் அதிரடியாக விளையாட இந்திய அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அதேபோல் ஹர்திக் பாண்ட்யாவும் தனது இயல்பான பாணியில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடாது. வழக்கம் போல டோனி 5-வது வீரராக களம் இறங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

* கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் செப்டம்பர் 4-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் 20 நாடுகளை சேர்ந்த 536 வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானும் இந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதில் எந்த அணியாவது இர்பான் பதானை எடுத்தால் அவர் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெற வேண்டியது அவசியமானதாகும். அனுமதி கிடைத்து இர்பான் பதான் விளையாடினால் வெளிநாட்டில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டியில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.


Next Story