பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* பெல்பாஸ்ட் நகரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அயர்லாந்து நிர்ணயித்த 211 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 35.4 ஓவர்களில் 138 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.


* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவில் இருந்து விலகி விடுவேன் என்று பில் சிமோன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) கூறியுள்ளார்.

* ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துள்ள ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் உலக கோப்பை போட்டியில் ஆடும்போது ரசிகர்களின் கேலிக்கு ஆளாக நேரிடலாம். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.