இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி; பதக்கங்களை உறுதி செய்த 10 இந்திய வீரர், வீராங்கனைகள்


இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி; பதக்கங்களை உறுதி செய்த 10 இந்திய வீரர், வீராங்கனைகள்
x
தினத்தந்தி 20 May 2019 1:03 PM GMT (Updated: 20 May 2019 1:03 PM GMT)

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 10 இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

கவுகாத்தி,

அசாமின் கவுகாத்தி நகரில் இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் இன்று தொடங்கின.  இந்த போட்டிகளில் 16 நாடுகளை சேர்ந்த 200 குத்து சண்டை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய தரப்பில் 38 வீரர்கள் மற்றும் 37 வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.  உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 முறை தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர் மேரி கோம்.  இது தவிர்த்து, 7 உலக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு ஏதேனும் ஒரு பதக்கம் வென்று சாதனை படைத்த ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.  இவர் 51 கிலோ எடை பிரிவில் விளையாடுகிறார்.

இந்த போட்டியில் இந்தியாவின் 6 வீரர்கள் மற்றும் 4 வீராங்கனைகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

ஆண்கள் தரப்பில், பிரிஜேஷ் யாதவ் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் 81 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதி போட்டிக்கும், நமன் தன்வார் மற்றும் சஞ்ஜீத் 91 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதி போட்டிக்கும், சதீஷ் குமார் மற்றும் அதுல் தாகூர் 91 கிலோவுக்கு கூடுதலான எடை பிரிவின் அரை இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளனர்.

பெண்கள் தரப்பில், லவ்லினா போர்கோஹைன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் 69 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதி போட்டிக்கும், பாக்யபதி கச்சாரி மற்றும் சவீதி பூரா ஆகிய இருவரும் 75 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளனர்.  கடந்த வருடம் இந்தியா 6 தங்க பதக்கங்களை வென்றது.

Next Story