பிற விளையாட்டு

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + National basketball: qualifying for the Tamil Nadu final

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
கோவை,

கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான முதல் அரை இறுதிப்போட்டியில் கேரளா-பஞ்சாப் அணிகள் மோதின. முடிவில் கேரள அணி 74-70 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தமிழக அணி முன்னிலை வகித்தது. இறுதியில் தமிழக அணி 57-34 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தான் அணியை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழக அணியை சேர்ந்த சத்யா 25 புள்ளிகள் குவித்தார்.


ஆண்களுக்கான முதல் அரை இறுதியில் கேரள அணி 65-62 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சையத் முஸ்தாக் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
சையத் முஸ்தாக் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.
2. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள்
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
3. தென் மண்டல டேபிள் டென்னிஸ்: தமிழக அணி ‘சாம்பியன்’
தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4. தென்மண்டல ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 200 வீரர்-வீராங்கனைகள்
தென்மண்டல ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணியில் 200 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.