சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்


சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வெளியேற்றம்
x
தினத்தந்தி 22 May 2019 11:08 PM GMT (Updated: 22 May 2019 11:08 PM GMT)

சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், இந்திய அணி வெளியேறியது.

நானிங்,

சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ‘1 டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று சீனாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் சீனாவிடம் பணிந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா 17-21, 20-22 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் லாங்கிடம் தோல்வி கண்டார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யு பெய்யிடம் தோல்வி அடைந்தார். இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனாவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியும் தோல்வி கண்டது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்று இருந்தது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்த இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

Next Story