பிற விளையாட்டு

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா வெற்றி + "||" + All India Junior Badminton: Navetha wins the Tamil Nadu in the opening match

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா வெற்றி

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா வெற்றி
அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா வெற்றிபெற்றார்.
சென்னை,

அகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் தெலுங்கானா வீராங்கனை காயத்ரி கோபிசந்த் 21-15, 21-15 என்ற நேர்செட்டில் டெல்லி வீராங்கனை குஷி தாக்கரை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா 21-9, 21-14 என்ற நேர்செட்டில் அகன்ஷா மாதேவை (ஆந்திரா) வீழ்த்தினார்.