பிற விளையாட்டு

இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Indian Open Boxing: Mary kom and Shivadhaba progress in the final

இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், ஷிவதபா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
கவுகாத்தி,

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் போலந்து வீரர் கிறிஸ்டியன் செபான்ஸ்கியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீரர்கள் தீபக், கோவிந்த் குமார் சஹானி (இருவரும் 49 கிலோ), அமித் பன்ஹால், சச்சின் (இருவரும் 52 கிலோ), கவிந்தர் சிங் பிஸ்த் (56 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), ரோஹித் தோகஸ் (64 கிலோ), ஆஷிஷ், துர்யோதன் சிங் நெஜி (இருவரும் 69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), பிரிஜேஷ் யாதவ், மனிஷ் பவார் (இருவரும் 81 கிலோ), நமன் தன்வார், சுமித் சங்வான் (இருவரும் 91 கிலோ), நவீன் குமார், சதீஷ்குமார் (இருவரும் 91 கிலோவுக்கு மேல்) ஆகியோரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.


பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மேரிகோம் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை நிஹாத் ஜரீனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.