பிற விளையாட்டு

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன் + "||" + All India Junior Badminton

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்

அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்
அகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
சென்னை, 

அகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சமியா இமாத் பரூகி (தெலுங்கானா) 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் டெல்லி வீராங்கனை ஆஷி ரவாத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சமியா, ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் ஆண்கள் பிரிவில் மணிப்பூர் வீரர் மைஸ்னம் மீரபா, டெல்லி வீரர் ஆகாஷ் யாதவை சந்தித்தார். இதில் மைஸ்னம் 21-9, 12-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போது காயம் காரணமாக ஆகாஷ் விலகினார். இதனால் மைஸ்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.