பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் - மேரிகோம் + "||" + Want to retire after Tokyo Olympics, says Mary Kom

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் - மேரிகோம்

டோக்கியோ  ஒலிம்பிக்கிற்கு பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் - மேரிகோம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் கூறியுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற பின்னர் ஓய்வு பெற விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். 

மேரிகோம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். 36 வயதாகும் மேரிகோம் தொடர்ந்து தீவிரமான பயிற்சியை மேற்கொள்கிறார். குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெயருடன் மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், ‘2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும்.

ஒலிம்பிக் தகுதி சுற்று மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு நான் தயாராக இருக்கிறேன். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.