பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது


பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது
x
தினத்தந்தி 11 Jun 2019 11:07 PM GMT (Updated: 11 Jun 2019 11:07 PM GMT)

24 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.


* இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் மாமியார் மரணம் அடைந்து விட்டதால் அவர் தாயகம் திரும்புகிறார். அடுத்த ஆட்டத்திற்குள் (ஜூன் 15-ந்தேதி) அவர் இலங்கை அணியுடன் இணைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ‘இந்திய கிரிக்கெட்டில் நேர்த்தியான ஒரு இடக்கை பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், சிறந்த மேட்ச் வின்னர்’ என்று பாகிஸ்தான் முன்னாள் அதிவேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பாராட்டியிருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ள யுவராஜ்சிங், ‘நான் விளையாடிய காலத்தில் என்னை அச்சுறுத்திய பவுலர்களில் சோயிப் அக்தரும் ஒருவர். அவர் ஓடி வருவதை பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அவருடனான மோதல் எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* காயத்தால் அவதிப்படும் இந்திய வீரர் ஷிகர் தவான் உடல்தகுதியை எட்ட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷாப் பான்டை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் (இந்தியா), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோர் கூறியுள்ளனர். அதே சமயம் தவானுக்கு பதிலாக அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

* பந்து தாக்கியும் ஸ்டம்பு மீதுள்ள பெய்ல்ஸ் கீழே விழாதது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். ஆனால் தொடரின் பாதியில் பெய்ல்சை மாற்றும் எண்ணம் இல்லை, உலக கோப்பையில் எல்லா ஆட்டங்களுக்கும் இதே பெய்ல்ஸ் தான் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

* 24 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.


Next Story