பிற விளையாட்டு

மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம் + "||" + State Ball Badminton Competition: Start Today in Chennai

மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
மாநில பால் பேட்மிண்டன் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
சென்னை,

ஒய்.எம்.சி.ஏ. சார்பில் மாநில அளவிலான பால் பேட்மிண்டன் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுநாள் வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் லயோலா, எஸ்.ஆர்.எம். உள்பட 20 அணிகளும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா, லேடி சிவசாமி உள்பட 17 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ.8 ஆயிரமும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.8 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.6 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு சேர்மன் ரவிக்குமார் டேவிட், செயலாளர் எரிக் கிறிஸ்டோபர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.