பிற விளையாட்டு

உலக வில்வித்தை: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + World Archery: qualifying for the Indian team final

உலக வில்வித்தை: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

உலக வில்வித்தை: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
உலக வில்வித்தை: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
டென்போஸ்ச், 

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ரிகர்வ் பிரிவின் அரைஇறுதியில் தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவின் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் டைபிரேக்கரில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2005-ம் ஆண்டுக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் ரிகர்வ் பிரிவில் இந்திய ஆண்கள் அணி இறுதிசுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும். நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.முன்னதாக இந்திய அணி கால்இறுதியை எட்டிய போது, ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.