உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி வாழ்த்து


உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jun 2019 4:05 PM GMT (Updated: 19 Jun 2019 4:33 PM GMT)

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 வருடங்களுக்கு ஒரு முறை ஜூன் 10 முதல் ஜூன் 16 வரை நடைபெறும்.  நெதர்லாந்து நாட்டில் சமீபத்தில் இந்த போட்டிகள் நடந்தன.

இதில் இந்திய வில்வித்தை வீரர்கள் பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் மற்றும் அடானு தாஸ் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.  போட்டியை நடத்திய நெதர்லாந்து நாட்டை தோற்கடித்த பின்பு சீனாவை இந்திய அணி எதிர்கொண்டது.  இதில் சீன அணி தங்க பதக்கம் வென்றது.  இந்த போட்டியில் கொரியா 3வது இடமும், நெதர்லாந்து 4வது இடமும் பிடித்தன.

போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணிக்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  வருகிற 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் முன்வந்துள்ளார்.

Next Story