16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 23 Jun 2019 10:00 PM GMT (Updated: 23 Jun 2019 8:09 PM GMT)

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 46–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 30–ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 46–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 30–ந்தேதி வரை நடக்கிறது. தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா, வருமானவரி (குஜராத்), இந்தியன் வங்கி, சுங்க இலாகா, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஐ.சி.எப், வருமானவரி (சென்னை), தமிழ்நாடு போலீஸ், செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி, எஸ்.டி.ஏ.டி. ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் கேரள போலீஸ், தென்மத்திய ரெயில்வே, சாய் (தலசேரி), டாக்டர் சிவந்தி கிளப், ஐ.சி.எப், எஸ்.டி.ஏ.டி. ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.5 லட்சம் ஆகும். ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி தங்கக் கோப்பையும், பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு எஸ்.என்.ஜே. கோப்பையும் வழங்கப்படும். இது தவிர சிறந்த வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.


Next Story