‘ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம்' என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்த மாணவர் பேட்டி


‘ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம்  என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்த மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2019 9:51 PM GMT (Updated: 27 Jun 2019 9:51 PM GMT)

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

இதில் விளையாட்டு பிரிவுக்கான ஒதுக்கீட்டில் முதல் இடத்தை ஆதித்யா பிடித்தார். இவர் நீச்சலில் கைதேர்ந்தவர். 8 வயதில் இருந்து நீச்சலில் ஆர்வம் காட்டிய இவர், 12-வது வயதில் தேசிய அளவில் பதக்கத்தை பெற்றார்.

நீச்சலில் தீராத பாசம் கொண்ட அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வெல்வது தான் லட்சியம் என்று தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்று இருக்கிறேன். கடந்த 2016-ம் ஆண்டு தெற்கு ஆசிய அளவில் தங்கப்பதக்கத்தை பெற்றேன்.

எனக்கு நீச்சல் எவ்வளவு பிடிக்குமோ? அதே அளவுக்கு படிப்பும் பிடிக்கும். இரண்டையும் சம அளவில் தக்க வைத்து வருகிறேன். வருகிற 2022-ம் ஆண்டு நடைபெறும் ஆசியப்போட்டியில் பங்கு பெறுவேன். அதனைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் கண்டிப்பாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வெல்வேன். அது தான் என்னுடைய லட்சியம். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story