சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக நரிந்தர் பத்ரா தேர்வு


சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக நரிந்தர் பத்ரா தேர்வு
x
தினத்தந்தி 27 Jun 2019 9:56 PM GMT (Updated: 27 Jun 2019 9:56 PM GMT)

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராக நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டனர்.

லாசானே,

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கமிட்டி கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானேவில் நடந்தது. இதில் புதிய உறுப்பினராக இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவருமான நரிந்தர் பத்ரா உள்பட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் நரிந்தர் பத்ராவுக்கு 58 ஓட்டுகள் கிடைத்தது. 4 பேர் மட்டுமே அவருக்கு எதிராக வாக்களித்தனர். தேசிய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச சம்மேளனத்தின் தலைவராகவும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினராகவும் ஒரு சேர பதவி வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை நரிந்தர் பத்ரா பெற்றுள்ளார்.

Next Story