பிற விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து: சுங்க இலாகா அணி ‘சாம்பியன்’ + "||" + All India Volleyball: Customs Team Champion

அகில இந்திய கைப்பந்து: சுங்க இலாகா அணி ‘சாம்பியன்’

அகில இந்திய கைப்பந்து: சுங்க இலாகா அணி ‘சாம்பியன்’
அகில இந்திய கைப்பந்து போட்டியில் சுங்க இலாகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் சுங்க இலாகா (சென்னை) அணி 19-25, 25-23, 25-22, 21-25, 16-14 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.சி.எப். (சென்னை) அணி 25-22, 25-21 என்ற நேர் செட்டில் வருமானவரி (குஜராத்) அணியை தோற்கடித்தது.


பட்டம் வென்ற வருமானவரி அணிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் டாக்டர் சிவந்தி தங்க கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த எஸ்.ஆர்.எம். அணிக்கு ரூ.75 ஆயிரமும், டி.எம்.பி. கோப்பையும் கிடைத்தது. 3-வது, 4-வது இடத்தை பிடித்த அணிகள் ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம் வீதம் பெற்றன. கோகுல்நாத், எரின், குருபிரசாந்த், மனோஜ், மிதுன்குமார் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டாக்டர் சிவந்தி விருதுடன் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசுகளை சென்னை வருமானவரி கமிஷனர் டி.வசந்தன், கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன் ஆகியோர் வழங்கினார்கள். விழாவில் சுங்க இலாகா கூடுதல் கமிஷனர் ஜோஸ் வர்கீஸ், வி.ஜி.பி. நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம், ரோமா குரூப் நிர்வாக இயக்குனர் ராஜன், போட்டி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.