பிற விளையாட்டு

இலக்கை அடையும் முன்பே அவசர கொண்டாட்டம் : வெற்றியை இழந்த வீரர் + "||" + You should've stayed in your lane! Ethiopian runner thinks he's won 5,000m race and celebrates towards crowd... before realising there's ANOTHER LAP to go

இலக்கை அடையும் முன்பே அவசர கொண்டாட்டம் : வெற்றியை இழந்த வீரர்

இலக்கை அடையும் முன்பே அவசர  கொண்டாட்டம் : வெற்றியை இழந்த வீரர்
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த நபர் இலக்கை அடையும் முன்பே வெற்றி பெற்றதாகக் கருதி கொண்டாடியதால் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த வெள்ளியன்று டைமண்ட் லீக் எனும் பெயரில்  ஓட்டப்பந்தயப் போட்டியில் ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற எத்தியோபியாவைச் சேர்ந்த ஹேகோஸ் கெப்ரிவெட்  எனும் வீரர் பங்கேற்றார். 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக ஓடிக் கொண்டிருந்த ஹேகோஸ், வெற்றி இலக்கை அடையும் முன்பே பார்வையாளர்களைப் பார்த்து கைகளை உயர்த்தி வெற்றி பெற்றதாகக் கருதி கொண்டாடினார்.

அவரது ஓட்டத்தின் வேகமும் குறைந்தது. திடீரென மற்றொரு வீரர் தன்னை முந்திக் கொண்டு ஓடுவதைக் கண்டதும், நடந்ததை உணர்ந்த ஹேகோஸ் முதலிடத்தை இழந்ததோடு 9 விநாடிகள் பின்தங்கியதால் 10-ம் இடத்தையே பெற நேர்ந்தது.