பிற விளையாட்டு

உலக யுனிவர்சியேட் தடகள போட்டி; தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை + "||" + Dutee wins 100m gold in World Universiade, creates history

உலக யுனிவர்சியேட் தடகள போட்டி; தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

உலக யுனிவர்சியேட் தடகள போட்டி; தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை
உலக யுனிவர்சியேட் பட்ட போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
நபோலி,

இத்தாலியின் நபோலி நகரில் உலக யுனிவர்சியேட் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், 100 மீட்டர் தடகள போட்டியில் மொத்தம் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இதில், இந்தியாவை சேர்ந்த தேசிய சாதனை படைத்த தடகள வீராங்கனையான டூட்டி சந்த் கலந்து கொண்டு 4வது வரிசையில் இருந்து தனது ஓட்டத்தினை தொடங்கினார்.

அவர் 11.32 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டி பிடித்து முதலாவது வீராங்கனையாக வந்து தங்க பதக்கம் தட்டி சென்றார்.  அவரை தொடர்ந்து சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்டி (11.33 வினாடிகள்) 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், ஜெர்மனி வீராங்கனை லிசா கிவா யீ (11.39 வினாடிகள்) 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர்.

ஒடிசாவை சேர்ந்த சந்த் இதற்கு முன் 11.24 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.  கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பந்தயத்தில் தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.

உலக அளவில் நடைபெறும் போட்டி ஒன்றில் தங்க பதக்கம் பெறும் 2வது வீராங்கனை என்ற வரலாறை சந்த் படைத்துள்ளார்.  கடந்த வருடம் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடம் பிடித்து ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 1,500 பயனாளிகளுக்கு ரூ.10¼ கோடியில் திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அரசு தலைமை கொறடா வழங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் 1,500 பயனாளிகளுக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ரூ.10¼ கோடியில் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம்ஆகியவற்ைறை வழங்கினார்.
2. கடுமையான விலை உயர்விலும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது - நிர்மலா சீதாராமன் உறுதி
கடுமையான விலை உயர்விலும் தங்கத்துக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது என நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
3. ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலம்
சேலத்தில் கைதான வடமாநில கும்பலிடம் 3½ கிலோ தங்கம், ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அம்பலமாகி உள்ளது.
5. தாராபுரத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன்–ரூ.2 லட்சம் திருட்டு
தாராபுரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.