பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் நேசிக்கப்படும் விளையாட்டாகும். நாங்களும் இந்திய அணியை போல் ஆடுவதால் இந்திய ரசிகர்கள் சொந்த அணிக்கு அளிப்பது போல் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

*காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 76 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் ‘ஸ்னாச்’ முறையில் 91 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 116 கிலோவும் என மொத்தம் 207 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.