பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்


பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்
x
தினத்தந்தி 14 July 2019 10:00 PM GMT (Updated: 14 July 2019 8:06 PM GMT)

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10–வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.

சில்வர்ஸ்டோன், 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10–வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.198 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 21 நிமிடம் 08.452 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து 26 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவர் பெற்ற 7–வது வெற்றி இதுவாகும். அவரை விட 24.9 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்தை சேர்ந்த வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2–வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 16–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

10 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 223 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போட்டாஸ் 184 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 28–ந்தேதி ஜெர்மனியில் நடக்கிறது.


Next Story