பிற விளையாட்டு

ரூ.15 லட்சம் பரிசுத்தொகைக்கான தேசிய பெண்கள் செஸ் போட்டி - காரைக்குடியில் நடக்கிறது + "||" + National Women Chess Tournament for prizes of Rs 15 lakh - Walking in Karaikudi

ரூ.15 லட்சம் பரிசுத்தொகைக்கான தேசிய பெண்கள் செஸ் போட்டி - காரைக்குடியில் நடக்கிறது

ரூ.15 லட்சம் பரிசுத்தொகைக்கான தேசிய பெண்கள் செஸ் போட்டி - காரைக்குடியில் நடக்கிறது
ரூ.15 லட்சம் பரிசுத்தொகைக்கான தேசிய பெண்கள் செஸ் போட்டி, காரைக்குடியில் நடக்கிறது.
சென்னை,

தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் மற்றும் அகில இந்திய செஸ் சம்மேளனம் அனுமதியுடன் செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆதரவுடன் கேஸ்டில் செஸ் அகாடமி சார்பில் 46-வது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 20 மாநிலங்களை சேர்ந்த 106 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 2 சர்வதேச மாஸ்டர்கள், 7 பெண்கள் கிராண்ட்மாஸ்டர்கள், 13 பெண்கள் சர்வதேச மாஸ்டர்கள், 8 பெண்கள் பிடே மாஸ்டர்ஸ் ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள். சவுமியா சாமிநாதன் (பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் போர்டு), பாக்தி குல்கர்னி (ஏர் இந்தியா), திவ்யா தேஷ்முக் (மராட்டியம்), விஜயலட்சுமி (தமிழ்நாடு), பாக்யஸ்ரீ திப்சாய் (மராட்டியம்) உள்பட முன்னணி வீராங்கனைகள் பலர் இந்த போட்டியில் பட்டத்துக்காக மல்லுகட்ட இருக்கிறார்கள். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனை உலக போட்டிக்கு தகுதி பெறுவார். போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.15 லட்சமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு கோப்பையுடன் ரூ.4 லட்சமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பெறுபவருக்கு ரூ.2 லட்சமும், 4-வது இடம் பெறுபவருக்கு ரூ.1½ லட்சமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் ஆனந்தராம் தெரிவித்துள்ளார்.