பிற விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து + "||" + Indonesian Open Badminton: Sindhu in final

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டனின் இறுதிப்போட்டிக்கு சிந்து தகுதி பெற்றார்.
ஜகர்தா,

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆல்-இங்கிலாந்து சாம்பியனான சென் யு பெயை (சீனா) எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய சிந்து 4-7 என்று பின்தங்கி இருந்தார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட சிந்து முதல் செட்டை போராடி வசப்படுத்தினார். 2-வது செட்டிலும் லேசான சறுக்கலை (1-4) சந்தித்த சிந்து அதன் பிறகு மளமளவென புள்ளிகளை குவித்து எதிராளியை திணறடித்தார்.


46 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பெயை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த சீசனில் சிந்து இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குக்கு (சீனதைபே) அதிர்ச்சி அளித்தார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். யமாகுச்சிக்கு எதிராக இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள சிந்து அதில் 10-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
2. இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் கால்இறுதிக்கு சிந்து தகுதிபெற்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...