பிற விளையாட்டு

உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை முறியடித்த ஹங்கேரி வீரர் + "||" + Hungary player, who broke Phelps' record in world swimming

உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை முறியடித்த ஹங்கேரி வீரர்

உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை முறியடித்த ஹங்கேரி வீரர்
உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மிலாக் முறியடித்தார்.
குவாங்ஜூ,

18-வது உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மிலாக் 1 நிமிடம் 50.73 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.


அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் 2009-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இந்த பிரிவில் 1 நிமிடம் 51.51 வினாடிகளில் இலக்கை அடைந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை 19 வயதான கிறிஸ்டோப் மிலாக் இப்போது முறியடித்துள்ளார்.