பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி + "||" + Sindhu, Sai Praneeth enter Japan Open quarters; Prannoy loses

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்திய வீராங்கனை சிந்து 2வது சுற்று மகளிர் ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் ஒஹோரியை 11-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோன்று இந்திய வீரர் சாய் பிரணீத் ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் கன்டாவை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.  எனினும், மற்றொரு இந்திய வீரர் பிரணாய் 2வது சுற்றில் டென்மார்க்கின் கெம்கேவிடம் தோல்வி அடைந்து உள்ளார்.