பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, பிரனீத் + "||" + Japan Open Badminton

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, பிரனீத்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, பிரனீத்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ, 

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் அயா ஒஹோரியை (ஜப்பான்) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை எதிர்கொள்கிறார். கடந்த வாரம் நடந்த இந்தோனேஷிய ஓபன் இறுதிசுற்றில் அகானே யமாகுச்சியிடம் அடைந்த தோல்விக்கு சிந்து பதிலடி கொடுப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-16 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கன்டா சுனியமாவை வெளியேற்றி கால்இறுதிக்குள் கால் பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய் 9-21, 15-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ராஸ்முஸ் ஜெம்கேவிடம் வீழ்ந்தார்.