பிற விளையாட்டு

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - இன்று தொடக்கம் + "||" + Chennai District Junior Athletic Tournament - Starting Today

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - இன்று தொடக்கம்

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - இன்று தொடக்கம்
சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி, இன்று தொடங்குகிறது.
சென்னை,

50-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 125 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில் சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ஆர்.சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க பொதுச்செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.