பிற விளையாட்டு

பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார் + "||" + Mary Kom Decimates Australia's April Franks to Win Gold at President's Cup

பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்

பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்
இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.
புதுடெல்லி,

23-வது பிரசிடென்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி இந்தோனேஷியாவின் லபுன் பாஜோ நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மேரிகோம், ஆஸ்திரேலியாவின் ஏப்ரல் பிராங்சை சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேரிகோம் 5-0 என்ற கணக்கில் பிராங்சை ஊதித்தள்ளியதோடு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை எதிர்நோக்கி உள்ள 6 முறை உலக சாம்பியனான 36 வயதான மேரிகோம் அடுத்து அக்டோபரில் நடக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

போட்டியில் வெற்ற பெற்ற பின்  மேரி கோம் தெரிவிக்கையில், "பிரசிடன்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் எனக்கும் எனது நாட்டிற்கும் தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். எனது பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு அளித்த ஊழியர்களுக்கு  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 60 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உள்ளூர் வீராங்கனை ஹசனா ஹஸ்வதுனை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜமுனா போரோ (54 கிலோ), மோனிகா (48 கிலோ) ஆகிய இந்திய இளம் வீராங்கனைகளும் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். இந்த தொடரில் இந்தியாவுக்கு 7 தங்கம், 2 வெள்ளி என்று மொத்தம் 9 பதக்கங்கள் கிடைத்தது.