பிற விளையாட்டு

கோவையில் நடைபெற்று வரும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பு + "||" + In the state sniper competition Actor Ajit Kumar participates

கோவையில் நடைபெற்று வரும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பு

கோவையில் நடைபெற்று வரும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பு
மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் கடந்த 28–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை,

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் கடந்த 28–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் உள்பட 850 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் உள்பட 5 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) போட்டிகள் நிறைவடைகின்றன.

அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மோட்டார் சைக்கிள் பந்தயம், கார் பந்தயம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபகாலமாக அவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் கோவையில் நடைபெறும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் நேற்று கலந்து கொண்டார். அவர் சென்னை ரைபிள் கிளப் சார்பில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்றார். இதற்காக அவர் காலை 8 மணிக்கு போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடுதல் மைதானத்திற்கு வந்தார். பின்னர் அவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி சுடுதல் வீரர்கள், வீராங்கனைகள், நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரும் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அஜித்குமார் வந்துள்ள தகவலை அறிந்து அவரை காண ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களை திரும்பி செல்லும் படி போலீசார் கூறினர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நடிகர் அஜித்குமாரை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அது தற்போது வேகமாக பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சினிமா, டி.வி. தொடர்கள் வெளியீடு: ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்துக்கு தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
சினிமா மற்றும் டி.வி. தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. புதிய கல்வி கொள்கையில் நடிகர் சூர்யாவின் கருத்து நியாயமானது - தனியரசு எம்.எல்.ஏ. பேட்டி
புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கூறிய கருத்து நியாயமானது என்று ஈரோட்டில் தனியரசு எம்.எல்.ஏ. கூறினார்.
3. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.
4. நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி
நடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு? என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
5. சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.