பிற விளையாட்டு

புரோ கபடி:தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’ + "||" + Pro Kabaddi: Telugu Titans-upiyotta play 'Die'

புரோ கபடி:தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’

புரோ கபடி:தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா ஆட்டம் ‘டை’
12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பை, 

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன. இதனால் பலமுறை இரு அணிகளும் சமநிலை வகித்தன. முதல் பாதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் 11-11 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. பின் பாதியிலும் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்தன. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் கடைசி ரைடில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி செய்த தொழில்நுட்ப தவறால் ஒரு புள்ளியை இழந்தது. இதனால் இந்த ஆட்டம் 20-20 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது.

இன்று (சனிக்கிழமை) பாட்னாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.