பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி + "||" + Thailand Open Badminton: Indian pair in final

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி 22–20, 22–24, 21–9 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் கோ சங் ஹூன்–ஷின்பாக் ஷோல் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த சீசனில் இந்த ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லீ ஜூன் ஹூய்–லியூ யூ சென் இணையை எதிர்கொள்கிறது.