பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 2–வது வெற்றி + "||" + Pro Kabaddi: Tamil Thalaivas 2nd success

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 2–வது வெற்றி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 2–வது வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி 35–28 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது.

பாட்னா,

புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி 35–28 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்தது. இதில் முதல் பாதியில் 10–19 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் எழுச்சி பெற்று அரியானாவை அடக்கியது. தலைவாஸ் வீரர் ராகுல் சவுத்ரி 23 முறை ரைடுக்கு சென்று அதில் 13 புள்ளிகள் சேகரித்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். 4–வது லீக்கில் ஆடிய தலைவாஸ் அணிக்கு இது 2–வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 41–20 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் தபாங் டெல்லி–ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.